சேதமடைந்த வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 9 May 2022 12:00 AM IST (Updated: 8 May 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே சேதமடைந்த வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி,
மே.9-
திருமருகல் அருகே சேதமடைந்த வாய்க்கால் மதகு சீரமைக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
வாய்க்கால் மதகு
 திருமருகலை அடுத்த ஆதினங்குடி முடிகொண்டான் ஆற்றில் ஆதினங்குடி உள்வாய்க்கால் தலைப்பில் மதகு அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் மூலம் ஆதினங்குடி, பண்டாரவடை, தென்பிடாகை, மானாம்ேபட்டை, மேலிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 147 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இந்த நிலையில் வாய்க்காலின் தலைப்பில் உள்ள மதகு கடந்த 5 ஆண்டுகளாக சேதம் அடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் விவசாயிகள் சாகுபடி நேரத்தில் மதகை திறந்து, மூட மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆதினங்குடி வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சேதமடைந்த மதகையும், உள்வாய்க்காலையும் சீரமைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மதகை சீரமைத்து உள்வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story