விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம்அருகே உள்ள முதுனாள் கிராமத்தை சேர்ந்தவர் மாரிச்சந்திரன் (வயது43). மினி சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வந்துள்ளார். குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில்அடிக்கடி குடும்பத்தில் சண்டைபோட்டு சாப்பிடாமல் இருந்துவந்தாராம். இந்தநிலையில் 2 மகள்களும் பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில் மனைவி பாரதி (36) 100 நாள் வேலைக்கு சென்று விட்டாராம்.இந்தநிலையில் மாரிச் சந்திரன் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதன்பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரே 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த மாரிச்சந்திரன் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி பாரதி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாத புரம் பஜார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story