விக்கிரவாண்டி அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரி கைது தாம்பரத்தில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்
விக்கிரவாண்டி அருகே நடந்த வாலிபர் கொலை வழக்கில் கஞ்சா வியாபாரி கைது தாம்பரத்தில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர்
விக்கிரவாண்டி
திண்டிவனம் தாலுகா வெங்கந்தூர் காலனியில் சென்னை கண்ணகிநகரை சேர்ந்த அசோக்(வயது 25) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக அதே பகுதியை சேர்ந்த ஞானவேல்(வயது 35) விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் ஞானவேலுவை அசோக் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தலைமறைவானார்.
அவரை கைது செய்ய விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் தலைமையிலான தனிப்படை போலீசார் அசோக்கை தேடி வந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாம்பரத்தில் தலைமறைவாக இருந்த அசோக்கை போலீசார் கைது செய்தனர். போலீசாருக்கு அளித்த வாக்கு மூலத்தில் தனது கஞ்சா வியாபாரம் குறித்து போலீசில் புகார் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஞானவேலுவை கொன்றதாக அசோக் தெரிவித்தார். கொலை நடந்த 8 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பாராட்டினார்.
Related Tags :
Next Story