தோகைமலை அருகே மீன்பிடி திருவிழா நடந்தது
தோகைமலை அருகே மீன்பிடி திருவிழா நடந்தது
தோகைமலை,
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கல்லடை ஊராட்சி கீழவெளியூரில் 62 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான பெரியகுளம் உள்ளது. மழைக்காலங்களில் பல்வேறு வகையான மீன்கள் குளத்திற்கு வருவது உண்டு. தற்போது குளத்தின் நீர் மட்டம் குறைந்து வருவதால் மீன்பிடி திருவிழா நடத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஊர் நாட்டாமை பாஸ்கர் தலைமையில் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில், கல்லடை, மேலவெளியூர், கீழவெளியூர், மஞ்சம்பட்டி, இடையப்பட்டி அழகம்பட்டி, பிள்ளையார்கோவில்பட்டி, புத்தூர், வடசேரி, பதிரிப்பட்டி, பில்லூர் ஆகிய ஊராட்சிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து ேபாட்டி, போட்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்து சென்றனர்.
Related Tags :
Next Story