கள் இறக்கிய 2 பேர் கைது


கள் இறக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 8 May 2022 11:09 PM IST (Updated: 8 May 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

கள் இறக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தில் பனையில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணராமன் தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு நேரில் சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கிருந்த பனைமரத்திலிருந்து கள் இறக்கியவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் பதனீர் இறக்குவதாக பொய்யான தகவலை கூறியுள்ளனர். உடனே போலீசார் அதனை பரிசோதித்தபோது கள் தான் என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து மேலும் விசாரணையில் அவர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, மேலவரகுணபுரம் பகுதி தெற்கு தெருவை சேர்ந்த சீமராஜா மகன் முத்துராமன்(வயது 37) என்பது தெரியவந்தது. இவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கூவத்தாரில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விருதுநகர் மாவட்டம் தெற்குதெருவை சேர்ந்த செம்புலிங்கம்(62) என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story