கடையை சூறையாடிய 5 பேர் மீது வழக்கு
கடையை சூறையாடிய 5 பேர் மீது வழக்கு செய்யப்பட்டது
சிவகங்கை,
சிவகங்கை அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் ரகுநாதன் (வயது60). இவர் அங்கு மளிகைக்கடை மற்றும் டீக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் அருகில் வசிக்கும் சித்தலூரை சேர்ந்த ராஜாராம் (40) என்பவருக்கும் புறம்போக்கு இடம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு தற்போது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ரகுநாதனின் மனைவிஅமுதா (53) மட்டும்கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ராஜா ராம் மற்றும் 4 பேர் ரகுநாதனின் கடையில் இருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இதில் காயம்அடைந்த அமுதா சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டார். சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி ராஜாராம் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்.
Related Tags :
Next Story