பாளையம் புனித சூசையப்பர் தேவாலய சப்பர பவனி


பாளையம் புனித சூசையப்பர் தேவாலய சப்பர பவனி
x
தினத்தந்தி 8 May 2022 11:17 PM IST (Updated: 8 May 2022 11:17 PM IST)
t-max-icont-min-icon

பாளையம் புனித சூசையப்பர் தேவாலய சப்பர பவனி நடைபெற்றது.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த புனித சூசையப்பர் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் 161-வது ஆண்டு பெருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களின் தினமும் பாளையம் பங்கினை சேர்ந்த கிளை கிராம கிறிஸ்தவ பொதுமக்கள் மற்றும் அன்பியம் குழுவினரால் திருவழிபாடுகள் நடத்தப்பட்டது. நற்செய்தி உரையும் வாசிக்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர சப்பர பவனி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. சப்பர பவனியை முன்னிட்டு மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நள்ளிரவு புனித சூசையப்பர், காவல் தூதர், வனத்த அந்தோணியார், உயிர்த்த ஏசு, தேவமாதா ஆகிய 5 சொரூபங்கள் தேவாலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த 5 சப்பரங்களில் தனித்தனியாக எழுந்தருளினர். இதையடுத்து சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சப்பரங்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, நேற்று மாலை மீண்டும் நிலையம் வந்தடைந்தது. அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெற்றது.

Next Story