அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா
சிங்கம்புணரி அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.
பிடிமண்
சிங்கம்புணரி அருகே காப்பாரப்பட்டியில் உள்ள புகழ் வாய்ந்த காப்பாரஅய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இதற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு புரவி செய்ய பிடி மண் கொடுக்கப் பட்டது. அதனை தொடர்ந்து சிங்கம்புணரி குலாலர் பஜனை மடம் முன்பு புரவி பொட்டலில் புரவிகள் தயார் செய்யப் பட்டது.
இதில் கோவில் சார்பாக கருப்பர்சாமி சிலை ஒன்றும் அரண்மனை புரவி 2 மற்றும் கரடி புரவி 1, நேர்த்திக்கடன் புரவி 2, கரடி 2 என மொத்தம் 7 புரவிகள் தயார் நிலையில் புரவி பொட்டலில் வைக்கப்பட்டது.
திருமணமான பெண்கள் குழந்தை பாக்கியத்திற்காக நேர்த்தி கடனுக்காக குழந்தை பொம்மைகள், நாகதோஷம் நீங்க நாக பொம்மைகள் செய்து வைக்கப்பட்டது. நேற்று மாலை 6 மணி அளவில் காப்பாரப்பட்டி கிராமத்தின் சார்பில் சாமி அழைத்து வந்து புரவிகளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
ஏற்பாடு
தொடர்ந்து அனைத்து புரவிகளுடன் குழந்தை பொம்மைகள், நாக பொம்மைகளை பெண்கள் சுமந்து மேலத்தெரு வழியாக சந்திவீரன் கூடம், நாட்டார்மங்கலம் சாலை வழியாக காப்பாரப்பட்டியில் உள்ள மந்தையில் கொண்டு வந்து இறக்கி வைத்து பூஜை செய்யப்பட்டு வழிபாடுகள் நடை பெற்றன. தொடர்ந்து காப்பாரபட்டி மந்தையில் இருந்து புரவிகள் புறப்பட்டு காப்பார அய்யனார் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. விழா ஏற்பாடுகளை காப்பார பட்டி கிராம மக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story