மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு


மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 8 May 2022 11:46 PM IST (Updated: 8 May 2022 11:46 PM IST)
t-max-icont-min-icon

மொபட்டில் மணல் கடத்தியவர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.

தா.பழூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் தனது உதவியாளருடன் கிராம ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அப்பகுதி வழியாக மொபட்டில் 4 மூட்டைகள் மணல் ஏற்றிக்கொண்டு வந்த சோழமாதேவி கீழத்தெருவை சேர்ந்த சந்திரகாசி மகன் நடராஜன்(வயது 62) என்பவரை தடுத்து விசாரித்தபோது, அரசு அனுமதி இன்றி மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. அந்த இடத்திலேயே மணல் மூட்டை மற்றும் மொபட் ஆகியவற்றை விட்டுவிட்டு நடராஜன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட்டை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story