குடிநீர் உறிஞ்சிய 13 மின் மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் உறிஞ்சிய 13 மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 May 2022 12:00 AM IST (Updated: 9 May 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் உறிஞ்சிய 13 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை:
பாளையங்கோட்டை மண்டலத்துக்கு உட்பட்ட 36-வது வார்டு காந்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளில் உதவி செயற்பொறியாளர் சாந்தி தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதிகளில் அனுமதியின்றி குடிநீர் உறிஞ்சிய 7 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட ராஜாநகர் பகுதியில் உதவி செயற்பொறியாளர் ராமசாமி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள வீடுகளில் அனுமதியின்றி குடிநீர் உறிஞ்சிய 6 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் 13 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story