புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 May 2022 12:01 AM IST (Updated: 9 May 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

3 ஆயிரத்து 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் நேற்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில் 1,637 இடங்களிலும், அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் 1,533 இடங்களிலும் என மொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தல் 3 ஆயிரத்து 170 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். புதுக்கோட்டை நகராட்சியில் அண்ணாசிலை அருகில் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை கலெக்டர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story