மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கொத்தனார் பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார்.
பணகுடி:
கன்னியாகுமரி மாவட்டம் பொற்றையடியைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 45). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் காவல்கிணறு பகுதியில் வேலைக்கு சென்று விட்டு, இரவில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர், மயிலாடியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி செல்வியையும் (35) மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.
காவல்கிணறு சந்திப்பு மேம்பாலத்தின் தென்புறம் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த கண்ணன், செல்வி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார்.
செல்வியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story