விஷம் குடித்த பெண் சாவு


விஷம் குடித்த பெண் சாவு
x
தினத்தந்தி 9 May 2022 12:17 AM IST (Updated: 9 May 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்த பெண் உயிரிழந்தார்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அனுக்கூர் அண்ணா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி தேவி (வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஏற்கனவே செல்வராஜ் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சம்பவத்தன்று தேவி வீட்டில் இருந்த போது பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேவி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story