கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம்
கார் மோதி 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.
மீன்சுருட்டி
அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவெளி காலனி தெருவை சேர்ந்தவர் தங்கசாமி(வயது 25). இவரும், இதே கிராமத்தை சேர்ந்தவர் இவரது நண்பர் வசந்த்(21) ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் ஜெயங்கொண்டம் குறுக்குசாலை செல்வதற்காக மீன்சுருட்டி அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தங்கசாமி மற்றும் பின்னால் உட்கார்ந்து வந்த வசந்த் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தங்கசாமி கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவர் கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள சின்னான்டிகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் மண்டலத்துரை(39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story