மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தொடக்கவிழா


மேலாண்மைக்குழு  மறுகட்டமைப்பு தொடக்கவிழா
x
தினத்தந்தி 9 May 2022 12:22 AM IST (Updated: 9 May 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தொடக்கவிழா நடைபெற்றது.

கீழப்பழுவூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ராணி அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தங்கராசு முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் மறுகட்டமைப்பு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் பல்வேறு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பொன்னாடை போத்தி கவுரவித்து பள்ளி வளர்ச்சிக்கு என்னெல்லாம் செய்ய வேண்டும் எப்படியெல்லாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசப்பட்டது. முடிவில் உதவி ஆசிரியை நன்றி கூறினார்.

Next Story