மாணவர் விழிப்புணர்வு பயணம்


மாணவர் விழிப்புணர்வு பயணம்
x
தினத்தந்தி 9 May 2022 12:25 AM IST (Updated: 9 May 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி மாணவர் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், 
கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் இளவரசன். இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக திகழும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் வலியுறுத்தி கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து சென்னை வரை சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் வைத்து தனுஷ் குமார் எம்.பி. தலைமையில் தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர். இதில் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, கவுன்சிலர் மீரா தனலட்சுமி முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story