கொரோனா தடுப்பூசி முகாம்
அருப்புக்கோட்டையில் நடைெபற்ற ெகாரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் வெள்ளக்கோட்டை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நெசவாளர் காலனி உள்ளிட்ட 34 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்தநிலையில் புதிய பஸ் நிலையம், நெசவாளர் காலனி உள்ளிட்ட நகர் பகுதிகளிலும் கஞ்சநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளிலும் நடைபெற்ற தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி நேரில் ஆய்வு செய்தார். மேலும் தடுப்பூசி போடும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், நகராட்சி ஆணையர் பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன்பந்தே நவாஸ், நகர்மன்ற துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story