தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக உருவாக்கப்படுகிறது; எச்.ராஜா பேட்டி
தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக உருவாக்கப்படுகிறது என்று எச்.ராஜா கூறினார்.
காரைக்குடி,
தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக உருவாக்கப்படுகிறது என்று எச்.ராஜா கூறினார்.
பேட்டி
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா காரைக் குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் அடிப் படையில் தான் நீட் அமலுக்கு வந்தது. நல்ல ஆலோசகர்கள் இருக்கும் அரசாங்கமாக இருந்தால் இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் டிற்கு தான் சென்றிருப்பார்கள். சட்டமன்றத்தில் தீர் மானத்தை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவதும் பின் அவரையும் மத்திய அரசையும் குறை கூறுவதிலும் எவ்வித நியாயமும் இல்லை. 2017-ல் அ.தி.மு.க. அரசு இதே தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியது. அப்போதைய கவர்னர் பொறுப்பு வகித்த வித்யாசாகர் ராவ் அதனை ஜனாதிபதிக்கு அனுப்பினார். ஜனாதிபதி அதனை திருப்பி அனுப்பிவிட்டார். அதே போலத்தான் இப்போதும் நடக்கும்.
அரசியல் சாசன சட்டம்
தற்போது முதல்-அமைச்சரே பல்கலைக்கழக வேந்தர் என தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். 1994-ம் ஆண்டு ஜனவரி 5-ந்் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இது போன்ற தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினார். அப்போதைய கவர்னர் சென்னாரெட்டி அதனை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார். அரசியல் சாசன சட்டங் களுக்கு எதிராக யாரும் செயல்பட முடியாது. தமிழகத்தில் தினமும் நிகழும் மின்வெட்டு செயற்கையாக உருவாக்கப் படுகிறது.
இதனால் சிலர் ஆதாயம் பெற மக்கள் பலர் வேதனைப் படுகின்றனர். இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆட்சியில் யு.பி.எஸ். (பேட்டரியால் இயங்கும் மின் உபகரணங்கள்) தேவைப் படவில்லை. தற்்போது யு.பி.எஸ். இல்லாமல் இருக்க முடியவில்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறிய பலவற்றை தற்போது நிறைவேற்ற இயலாது என நிதி அமைச்சரே ஒப்புக்கொள்கிறார்.
அச்சுறுத்தல்
அ.தி.மு.க. ஆட்சியில் சாத்தான்குளத்தில் மட்டுமே போலீஸ் நிலைய விசாரணையில் மரணம் ஏற்பட்டது. ஆனால் தற்போது போலீஸ் நிலைய மரணங்கள் தொடர்கின்றன. இந்துக்களும், ஆதீனங்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாவதை அரசு வேடிக்கை பார்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story