முத்துப்பட்டியில் உள்ள நறுமண பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
சிவகங்கை அடுத்த முத்து பட்டியில் உள்ள நறுமண பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை அடுத்த முத்து பட்டியில் உள்ள நறுமண பூங்காவை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சி குழு கோரிக்கை விடுத்துள்ளது.
வளர்ச்சிக்குழு கூட்டம்
சிவகங்கை சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக் குழுக்கூட்டம் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் தலைமையில் சிவகங் கையில் நடைபெற்றது. வக்கீல் ராம் பிரபாகர் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மூத்த வக்கீல் மோகனசுந்தரம், தொழில் அதிபர் பாலு, சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், துணைத் தலைவர் கார் கண்ணன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயசிம்மா நாச்சியப்பன், நகர் திராவிடர் கழகத் தலைவர் வக்கீல் இன்பநாதன், முன்னாள் நகர சபை தலைவர் அர்ஜுனன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச்செயலாளர் இளங்கோவன் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பில்லூர் ராமசாமி, சாந்தா ராணி, மற்றும் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள், வக்கீல்கள் பொதுமக்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
புதிய திட்டம்
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கூறியதாவது:- சிவகங்கை மாவட்டத் தலைநகராக இருந்தும் போதுமான வளர்ச்சிகள் இல்லாமல் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் எந்த ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
மாவட்ட தலைமை நீதிமன்றம் உட்பட 13 நீதிமன்றங்கள் இங்கு செயல்பட்டுவரும் நிலையில் சட்டக்கல்லூரியை வேறு பகுதிக்கு கொண்டு செல்வது என்பது ஏற்புடையது அல்ல. அரசிற்கு அழுத்தம் கொடுத்து சட்டக்கல்லூரியை இங்கேயே அமைக்க வலியுறுத்த வேண்டும்.
நீண்டகாலமாக இந்த பகுதி மக்களின் கனவாக உள்ள கிராபைட் தொழிற்சாலை விரிவாக்கப் பணியும் உப தொழில்கள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக தொண்டி ெரயில்வே பாதை அமைக்க வேண்டும். முத்துப்பட்டியில் உள்ள நறுமண பூங்காவை பயன்பாட்டிற்குக கொண்டு வரவேண்டும்.
கையேடு
மேலும் இந்த தொகுதிக்கு வளர்ச்சிக்கு தேவையான அனைத்து விசயங்களையும் செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். கூட்டத்தில் சிவகங்கை சட்டமன்ற தொகுதி யின் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் விரிவாக்கப் பணிகளை செய்ய தமிழக அரசை கேட்டுக் கொண்டும். இதுதொடர்பாக குழு அமைத்து முதல்- அமைச் சரை சந்தித்து கோரிக்கை விடுப்பது என்றும் முடிவு செய்யப் பட்டது. பின்னர் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் நிறை வேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த கையேடு வெளியிடப்பட்டது.
Related Tags :
Next Story