மரக்கன்றுகள் நடும் விழா
சாத்தூரில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சாத்தூர்,
சாத்தூரில் மியாவாக்கி அடர் வனக்காடுகள் அமைப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. விழாவிற்கு சாத்தூர் நகராட்சி ஆணையாளர் நித்தியா முன்னிலை வகித்தார். நகர்மன்ற தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். நென்மேனி செல்லும் சாலையில் நுண்ணுயிர் உர மையத்தின் அருகில் உள்ள இடத்தில் மியாவாக்கி அடர்வன காடுகள் அமைப்பு திட்டத்தில் 80 மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் நகர்மன்ற துணை தலைவர் அசோக், 22 நகர் மன்ற உறுப்பினர்கள், சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல அருப்புக்கோட்டை அருகே சுக்கிலநத்தத்தில் நகராட்சி கலவை உரக்கிடங்கை சுற்றி நகராட்சி சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மியாவாக்கி அடர்வனக்காடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தினை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகர் நல அலுவலர் ராஜநந்தினி, பொறியாளர் ஹசீனா பேகம், தி.மு.க. நகர செயலாளர் மணி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story