அரசு, தனியார் பஸ்களில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு
அரசு, தனியார் பஸ்களில் போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தினார்கள்.
மதுரை,
மதுரை வடக்கு, மத்தி, தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உத்தரவின்பேரில் மதுரை மாட்டுதாவணி, ஆரப்பாளையம், உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர், வாடிப்பட்டி உள்ளிட்ட பஸ்நிலையங்களில், தனியார் மற்றும் அரசு பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்றுஒலிப்பான்கள் (ஏர்கார்ன்) அகற்றும் பணி நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செல்வம் (வடக்கு), சித்ரா (மத்தி), சிங்காரவேலு (தெற்கு), மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாஸ்மின் மெர்சி கமலா ஆகியோர் கொண்ட குழுவினர், நேற்றும், நேற்று முன்தினமும் பஸ் நிலையங்களில நின்று கொண்டிருந்த பஸ்களில் சோதனை செய்தனர். அப்போது, 97 பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டு, அவைகள் அகற்றப்பட்டன. மேலும், இதுபோல், அதிக ஒலிஎழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
----
Related Tags :
Next Story