ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 12½ கிலோ கஞ்சா, புகையிலை பறிமுதல்
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 12½ கிலோ கஞ்சா, புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சி,
நாகை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையிலான போலீசார் கார்த்திகேயன், குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் புவனேசுவரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது, அதில் எஸ்.8 முன்பதிவு பெட்டியில் ஒரு பெரிய பை கேட்பாரற்று கிடந்தது. அதுபற்றி அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரித்த போது யாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. இதைத்தொடர்ந்து அந்த பையை பிரித்து பார்த்த போது, அதில் 12 கிலோ புகையிலை பொருட்களும், ½ கிலோ கஞ்சாவும் இருந்தன. இதைத்தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா, புகையிலை பொருட்களை ரெயிலில் கடத்தி வந்த நபர்கள் யார்? யாருக்காக அவை கொண்டு வரப்பட்டன? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story