தியாகராஜர் சுவாமிகளின் பிறந்தநாள் விழா


தியாகராஜர் சுவாமிகளின் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 9 May 2022 2:11 AM IST (Updated: 9 May 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

தியாகராஜர் சுவாமிகளின் பிறந்தநாள் விழா நடைபெற்றது

திருவையாறு
திருவையாறு தியாகராஜர் சுவாமிகளின் 255-வது பிறந்த நாளையொட்டி நேற்று காலையில் தியாகராஜர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து திருவையாறு, தஞ்சாவூர், சென்னையை சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜரின் பஞ்சரத்தின கீர்த்தனைகள் பாடி தியாகராஜர் சுவாமிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினா். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜர் சுவாமிகளை வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தியாகராஜர் பரம்பரை சேர்ந்த பூஜாஸ்தானிகர் தியாகராஜ சர்மா செய்திருந்தார்.



Next Story