சி.டி. கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை


சி.டி. கடை உரிமையாளர்  விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2022 2:16 AM IST (Updated: 9 May 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

சி.டி. கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாகர்கோவில்:
நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் எம்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 55). இவர் வடசேரி பகுதியில் சி.டி. கடை நடத்தி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், கடையை நடத்த பலரிடம் பணம் கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் அதை கிருஷ்ணசாமியிடம் திருப்பி கேட்ட போது, அவரால் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த கிருஷ்ணசாமி சம்பவத்தன்று பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் தென்னந்தோப்பில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். 
இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story