விஷம் குடித்த அரசு பள்ளி ஊழியர் சாவு
விஷம் குடித்த அரசு பள்ளி ஊழியர் உயிரிழந்தார்
அம்மாப்பேட்டை
அம்மாப்பேட்டை அருகே உள்ள செண்பகபுரம் கிராமம், தெற்கு தெருவில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (வயது 47). இவர் பூதலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பேபி. இவர் புலவன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக சுப்பிரமணியன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த அவர், சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பேபி கொடுத்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story