ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது- தக்காளி தொடர்ந்து ஏறுமுகம்


ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது- தக்காளி தொடர்ந்து ஏறுமுகம்
x
தினத்தந்தி 8 May 2022 9:59 PM GMT (Updated: 8 May 2022 9:59 PM GMT)

ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது. தக்காளி விலை தொடர்ந்து ஏறி வருகிறது.

ஈரோடு
ஈரோடு நேதாஜி தினசரி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் காய்கறி விலை குறைந்தது. தக்காளி விலை தொடர்ந்து ஏறி வருகிறது.
காய்கறி மார்க்கெட்
ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் சத்தியமங்கலம், தாளவாடி, கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச்செல்கிறார்கள். இதேபோல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர்களும் இங்கு வந்து காய்கறிகளை வாங்குகின்றனர்.
விலை குறைவு
கடந்த சில வாரங்களாக காய்கறிகள் வரத்து குறைந்ததால், பல்வேறு காய்கறிகளின் விலை அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால் காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது.
எனினும் தக்காளி விலை மட்டும் குறையாமல் உள்ளது. ஈரோடு மார்க்கெட்டிற்கு தினமும் 10 டன் தக்காளி வரத்தான நிலையில் தற்போது பாதியாக குறைந்து 5 டன் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகிறது. நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கத்தரிக்காய் -ரூ.40, முள்ளங்கி -ரூ.30, அவரைக்காய் -ரூ.60, பீர்க்கங்காய் -ரூ.60, பாகற்காய்- ரூ.50, வெண்டைக்காய் -ரூ.40, பீட்ரூட் -ரூ.40, பீன்ஸ் -ரூ.60, புடலங்காய் -ரூ.40, முருங்கைக்காய் -ரூ.40, முட்டைக்கோஸ் -ரூ.10 முதல் 20 வரை, காலிபிளவர் -ரூ.20, மிளகாய் -ரூ.40, சின்ன வெங்காயம்- ரூ.20, பெரிய வெங்காயம் -ரூ.20.

Next Story