ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு வந்த 35 கிலோ எடையுள்ள மீன்


ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு வந்த 35 கிலோ எடையுள்ள மீன்
x
தினத்தந்தி 9 May 2022 3:29 AM IST (Updated: 9 May 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சந்தைக்கு விற்பனைக்கு வந்த 35 கிலோ எடையுள்ள மீன்

ஈரோடு
ஈரோட்டில் ரெயில் நிலையம் அருகே ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் மீன் சந்தை இயங்கி வருகிறது. வார நாட்களில் சென்னிமலை ரோடு, பெருந்துறை ரோடு, சம்பத்நகர் உள்பட பல்வேறு இடங்களிலும் மீன் விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட பல்வேறு கடற்கரை கிராமங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. அப்படி வரும் சில மீன்கள் அதிக எடை, வித்தியாசமான வகை என்று மீன் விற்பனையாளர்கள், பொதுமக்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றன.
அதன்படி நேற்று ஈரோடு ஸ்டோனி பாலம் மீன் சந்தைக்கு 35 கிலோ எடை கொண்ட ஒரு பால் சுறா மீன் விற்பனைக்கு வந்தது. இதை பொதுமக்களும் ஆச்சரியமாக பார்த்தனர். பால் சுறா மருத்துவ குணம் கொண்டது என்பதால் பலரும் போட்டிப்போட்டு இந்த மீனை வாங்கிச்சென்றனர். இதுபோல் மயில் மீன், கிளி மூக்கு மீன் ஆகியவையும் நேற்று விற்பனைக்கு வந்தது.

Related Tags :
Next Story