கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,160 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  2,160 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 9 May 2022 10:42 AM IST (Updated: 9 May 2022 10:42 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,160 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,160 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது.
கொரோனா தடுப்பூசி முகாம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 29-ம் கட்டமாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடந்தது. நேற்று பர்கூர் தாலுகா சுண்டம்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி தாலுகா காட்டிநாயனப்பள்ளி ஆகிய கிராமங்களில் நடந்த தடுப்பூசி முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,160 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் முதல் தவணையாக 51 ஆயிரத்து 923 பேரும், 2-வது தவணையாக 16 ஆயிரத்து 344 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் முதல் தவணையாக 78 ஆயிரத்து 453 பேரும், 2-வது தவணையாக 61 ஆயிரத்து 938 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 
முககவசம்
இதேபோல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதல் தவணையாக 13 லட்சத்து 40 ஆயிரத்து 966 பேரும், 2-வது தவணையாக 9 லட்சத்து 51 ஆயிரத்து 996 பேரும்் செலுத்தி கொண்டனர். கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதன் மூலம் தீவிர நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சத்தீஸ்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலர்கள் சுசித்ரா, விமல், பர்கூர் தாசில்தார் பிரதாப், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story