கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூருக்கு காரில் கடத்திய ரூ.4.21 லட்சம் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூருக்கு  காரில் கடத்திய ரூ.4.21 லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 9 May 2022 10:43 AM IST (Updated: 9 May 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூருக்கு கடத்திய ரூ.4.21 லட்சம் குட்காவை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார் மேலும் 24 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி வழியாக திருப்பத்தூருக்கு கடத்திய ரூ.4.21 லட்சம் குட்காவை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார் மேலும் 24 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
குட்கா கடத்தல் 
பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக வெளியூருக்கு குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பம் ஜங்ஷன் அருகில் நேற்று முன்தினம் காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை நோக்கி ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் பான் மசாலா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட குட்கா 505 கிலோ கடத்தி வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 608 ஆகும்.
டிரைவர் கைது 
இதுதொடர்பாக நாட்ராம்பள்ளி அருகே உள்ள மல்லகுண்டா பகுதியை சேர்ந்த டிரைவர் தங்கராஜ் (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது பெங்களூருவில் இருந்து திருப்பத்தூருக்கு குட்காவை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
குட்கா கடத்தல் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பூவரசன், மணி, குருவி என்கிற சிங்காரவேலன், அரசு என்கிற அரசகுமார் மற்றும் 20 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story