எண்ணூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தமிழகத்தின் கடற்கரையொட்டிய எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை வட ஆந்திரா - ஒடிசா கடற்கரைக்கு சென்று பின்னர், மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் ஒடிசா அல்லது ஆந்திராவில் கரையை கடக்காமல், கடற்கரைக்கு இணையாக பயணிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்தத் தாழ்வு வலுப்பெற்றதையடுத்து, தமிழகத்தின் கடற்கரையொட்டிய எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story