கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 May 2022 5:43 PM IST (Updated: 9 May 2022 5:43 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் அ.சரோஜா தலைமை தாங்கினார். சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பி.பரமராஜ், நகர துணை செயலாளர் டி.முனியசாமி, ஜி.அலாவுதீன், நகர குழு உறுப்பினர்கள் எம்.ராஜி, எஸ்.சண்முகவேல், தாலுகா செயலாளர் ஜி.பாபு, மாதர் சங்கம் எஸ்.கோமதி, ஏ.விஜயலட்சுமி, வஜ்ரேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story