ஓட்டப்பிடாரம் அருகே புனித சவேரியார் ஆலய தேர் பவனி


ஓட்டப்பிடாரம் அருகே புனித சவேரியார் ஆலய தேர் பவனி
x
தினத்தந்தி 9 May 2022 5:51 PM IST (Updated: 9 May 2022 5:51 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே புனித சவேரியார் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடந்தது.

ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே கல்லத்திக்கிணறு கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சவேரியார் ஆலய சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலையில் திருப்பலியும், ஆராதனையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றதால் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சவேரியாரை வழிபட்டனர். தேர் பவனியில் கூடவே ஈரத்துணியுடன் சென்று கீழே விழுந்து வழிபட்டால் தாங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. இதனால் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளுடன் திரளான பெண்கள் தேர் முன்பு ஈரத்துணியுடன் விழுந்து வணங்கி வழிபட்டனர்.

Next Story