பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணி: சோழிங்கநல்லூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்


பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணி: சோழிங்கநல்லூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
x
தினத்தந்தி 9 May 2022 5:54 PM IST (Updated: 9 May 2022 5:54 PM IST)
t-max-icont-min-icon

பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணி காரணமாக சோழிங்கநல்லூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் பகுதி 15-க்கு உட்பட்ட ஒக்கியம் துரைப்பாக்கம், பி.டி.சி. பகுதியில் நடை மேம்பாலம் அருகில் பழைய மாமல்லபுரம் சாலையில் 500 மில்லி மீட்டர் விட்டமுள்ள பிரதான குடிநீர் குழாயில் இணைப்பு பணிகள் வருகிற 11-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் 12-ந்தேதி(வியாழக்கிழமை) காலை 6 மணி வரை நடக்கிறது. இதனால் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகி நகர், எழில் நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி, கொட்டிவாக்கம் மற்றும் பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்த நேரத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இப்பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு 12-ந்தேதி காலை 10 மணி முதல் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெறலாம். பெருங்குடி, கொட்டிவாக்கம், பாலவாக்கம் பகுதிகளை சேர்ந்தவர்கள் பகுதி பொறியாளர் செல்போன் எண் 81449-30914, செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், சோழிங்கநல்லூர், காரப்பாக்கம், கண்ணகிநகர், எழில்நகர் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதிகளை சேர்ந்தவர்கள் பகுதி பொறியாளர் செல்போன் எண் 81449-30915 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story