தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 37 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 37 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக பணியாற்றும் போலீசார் பாராட்டப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்தவர்கள் மற்றும் வழக்குகளை திறம்பட கையாண்ட போலீசார் 37 பேரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story