ஊட்டி அணி வெற்றி
ஊட்டி அணி வெற்றி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் இன்று நடைபெற்ற பி டிவிஷன் பிரிவில் ஊட்டி நியூ ஸ்டார் கிரிக்கெட் அணி மற்றும் கேத்தி சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி அணி பங்கேற்று விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஊட்டி நியூ ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 27 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் குவித்தது.
இந்த அணியை சேர்ந்த வீரர் சரவணா அதிகபட்சமாக 91 ரன்கள், சுரேஷ் 65 ரன்கள் மற்றும் சுந்தர மூர்த்தி 37 ரன்கள் எடுத்தனர். சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணியின் பந்து வீச்சாளர் தீபக் 2 விக்கட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 162 பந்துகளில் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி அணி 27 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் தயானந்த் 100 ரன்கள் மற்றும் ரெஹான் ஜோ 86 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஊட்டி நியூ ஸ்டார் அணி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story