முனீஸ்வரர் கோவில் திருவிழா
ஜோலார்பேட்டை அருகே முனீஸ்வரர் கோவில் திருவிழா நடந்தது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அடுத்த சாலை நகரில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை தினத்தன்றும் முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சாலை நகர் பொது மக்கள் சார்பில் முனீஸ்வரருக்கு திருவிழா நடத்தி வருகின்றனர்.
அதன்படி இந்த வருடத்திற்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜை மற்றும் ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் மஞ்சுளா ராமச்சந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story