தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு
அனில் தேஷ்முக் தனியார் ஆஸ்பத்திரியில் கிசிச்சை பெற அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை,
அனில் தேஷ்முக் தனியார் ஆஸ்பத்திரியில் கிசிச்சை பெற அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மனு தாக்கல்
மும்பை முன்னாள் போலீஸ் கமிஷரான பரம்பீர் சிங் பார்கள், ஓட்டல்களில் இருந்து மாமுல் வசூலிக்குமாறு போலீசாரை கட்டாயப்படுத்தியதாக அப்போது உள்துறை மந்திரியாக இருந்த அனில் தேஷ்முக் மீது பரபரப்பு குற்றம் சாட்டினார். இதன்காரணமாக மந்திரி பதவியை ராஜினாமா செய்த அனில் தேஷ்முக் அமலாகத்துறையால் கைது செய்யப்பட்டார்.
தற்போது நீதிமன்ற காவலில் சிறைவாசம் அனுபவித்து வரும் அவர், தோள்பட்டை வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய ஜே.ஜே. ஆஸ்பத்திரி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் தனியார் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்துகொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என்று அனில் தேஷ்முக் சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அமலாக்கத்துறை எதிர்ப்பு
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு தனியார் ஆஸ்பத்தியில் சிசிச்சை அளிக்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், அனில் தேஷ்முக்கிற்கு அவசரமாக அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை. ஏனெனில் அவருக்கு தோள்பட்டை வலி குறித்த நீண்டகால வரலாறு உள்ளது. அவரின் அறுவை சிகிச்சை குறித்து எதிர்காலத்தில் சிந்திக்கலாம். அப்படியே அவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள விரும்பினாலும் ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரியிலேயே அனுபவம் வாய்ந்த டாக்டர்கள் உள்ளனர் என்று தெரிவித்தனர்.
இன்று தீர்ப்பு
அதேநேரம் அனில் தேஷ்முக் தரப்பில் ஆஜரான வக்கீல், “அவருக்கு தோள்பட்டை வலி நீண்ட காலமாக இருந்தாலும், சிறையில் அவர் கீழே விழுந்ததில் இருந்து வலி மோசமாக உள்ளது. அவரது வலி குறையவில்லை. தேஷ்முக் தான் விரும்பும் மருத்துவரிடம் சிகிச்சை மேற்கொள்ள கருதுகிறார். அறுவை சிகிச்சைக்கான செலவை தேஷ்முக் ஏற்க தயாராக இருக்கும் பட்சத்தில், அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என அமலாக்கத்துறை வற்புறுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மனு மீதான தீர்ப்பு நாளை (செய்வாய்க்கிழமை) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------
Related Tags :
Next Story