ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்லும் அனுமதி அளிக்க கூடாது என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்லும் அனுமதி அளிக்க கூடாது என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்
கோவை
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்துக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் எடுத்துச்செல்லும் அனுமதி அளிக்க கூடாது என்று கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.
இதில் ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் அளித்த மனுவில், கோவையில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 73 ஓட்டல்களில் இருந்து கெட்டுப்போன ஷவர்மா வை பறிமுதல் செய்தனர்.
அந்த ஓட்டல்களின் பெயர்களை வெளியிட்டால் அங்கு செல்வதை பொதுமக்கள் தவிர்ப்பார்கள்.
எனவே அந்த ஓட்டல்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
சின்னவேடம்பட்டி குறிஞ்சி நகர் பொதுமக்கள் அளித்த மனு வில், எங்கள் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 3 பள்ளிகள் இருக்கிறது.
இங்கு பாதாள சாக்கடைக்கு கழிவுநீர் உந்துநிலையம் அமைத்தால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே எங்கள் பகுதியில் கழிவுநீர் உந்துநிலையம் அமைக்கக ்கூடாது என கூறப்பட்டு உள்ளது.
அரசு ஆஸ்பத்திரி
திராவிடர் தமிழர் கட்சியினர் அளித்த மனுவில், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
ஆனால் அங்கு சி.டி.ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை கருவிகள் மிகக்குறைந்த அளவில்தான் உள்ளது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே கோவை அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை கருவிகளை அதிகப்படுத்த வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்த மனுவில், தொண்டா முத்தூர், வேடப்பட்டி, மத்வராயபுரம் மற்றும் பல பகுதிகளில் குடியிருந்து வரும் ஏழை-எளிய தினக்கூலி வேலை செய்யும் மக்க ளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
அனுமதி அளிக்கக்கூடாது
தமிழக விவசாயிகள் சங்கம் கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான ஆழியாறு அணையில் இருந்து ஏற்கனவே பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல் லும் திட்டம் நிறைவேற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. ஆனைமலை- நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதுதவிர பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப் பட்டது. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story