பொதுஇடங்களில் முககவசம் அணியாவிட்டால் அபராதம்

பொதுஇடங்களில் முககவசம் அணியாவிட்டால் அபராதம்
x
தினத்தந்தி 9 May 2022 8:25 PM IST (Updated: 9 May 2022 8:25 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழ்நிலையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.

ராமநாதபுரம், 
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழ்நிலையில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.
மனு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் 256 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கும் சூழ்நிலை யில் தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்ற வேண்டும். 
அபராதம்
பொது இடங்களில் முககவசம் அணியாத வர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story