மோட்டார்சைக்கிளை எடுத்து சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பலி


மோட்டார்சைக்கிளை எடுத்து சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பலி
x
தினத்தந்தி 9 May 2022 8:38 PM IST (Updated: 9 May 2022 8:38 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார்சைக்கிளை எடுத்து சென்ற வாலிபர் பாலத்தில் மோதி பலியானார்.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள ஊரக்குடி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் நித்ய செல்வம் (வயது30). இவர் இளை யான்குடி தாலுகா பகைவரை வென்றான் கிராமத்தில் உள்ள அவரது மைத்துனர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளார். அப்போது வரும் வழியில் இளையான்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க செல்வதற்காக அவர் வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சாவியை எடுக்காமல் சென்றுள்ளார்.அதை பார்த்த 35 வயது வாலிபர் ஒருவர் அந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பரமக்குடி வழியாக முதுகுளத்தூர் சென்றுள்ளார். அப்போது முதுகுளத்தூர் செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி அந்த நபர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அதை பார்த்ததும் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று அந்த நபரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்பு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மானாமதுரை அருகே அவர் இறந்து விட்டார். இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சித்ராதேவி கொடுத்த புகாரின் பேரில் எமனேவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ் செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story