சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சாத்தான்குளம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை முத்தம்மாள்புரத்தைச் சேர்ந்த தங்கமணி மகன் பாலகிருஷ்ணன் (வயது 35). கூலித்தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாம். சம்பவத்தன்றும் அவர் மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அவரை மனைவி கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் அன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story