சாத்தான்குளத்தில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


சாத்தான்குளத்தில் கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
x
தினத்தந்தி 9 May 2022 8:53 PM IST (Updated: 9 May 2022 8:53 PM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சாத்தான்குளம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி சாத்தான்குளம் யூனியன் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வட்ட செயலர் இஸ்மாயில் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், துணை வட்டார அலுவலர் விஜய் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். ராஜேஷ் நன்றி கூறினார்.
சாத்தான்குளம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட துணைத்தலைவர் சூராஜ் தலைமை தாங்கினார்.. வட்ட செயலர் இஸ்மாயில் வரவேற்றார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் சார்லஸ் கோரிக்கையை விளக்கி பேசினார். இதில் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க வட்ட நிர்வாகி தனுஷ் நன்றி கூறினார்.

Next Story