பனியன் நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளை
பனியன் நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளை
பெருமாநல்லூர்,
பெருமாநல்லூர் அருகே பனியன் நிறுவன அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 31 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பனியன் நிறுவன அதிபர்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கூட்டுறவு நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர் திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் பனியன் லேபிள் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜெயலட்சுமி (34). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 5 வயதில் மகளும் உள்ளனர்.
பள்ளி விடுமுறையையொட்டி ஜெயலட்சுமி தனது குழந்தைகளை சோளிபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தைகளை பார்த்து வருவதற்காக மணிகண்டனும், அவரது மனைவியும் சோளிபாளையம் சென்றனர். அன்று இரவு மழை பெய்ததால் அங்கேயே தங்கி விட்டனர்.
31 பவுன் நகைகள்
நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் 2 அறைகளில் இருந்த பீரோக்களும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 31 பவுன் நகைகள், ரூ.1000 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டன் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மோப்ப நாய்
சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு திருடர்களின் கைரேகை மற்றும் தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
வீட்டின் பின் பகுதியில் காலி இடம் இருப்பதால் அந்த வழியாக வந்த கொள்ளையர்கள் சுவர் ஏறி குதித்து, கதவு மற்றும் பீரோவை உடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்
Related Tags :
Next Story