திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்2 ஆங்கிலத்தேர்வை 91 மையங்களில் 24 ஆயிரத்து 520 மாணவமாணவிகள் எழுதினர்
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்2 ஆங்கிலத்தேர்வை 91 மையங்களில் 24 ஆயிரத்து 520 மாணவமாணவிகள் எழுதினர்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 ஆங்கிலத்தேர்வை 91 மையங்களில் 24 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகள் எழுதினர். 1,209 பேர் தேர்வு எழுத விரவில்லை.
ஆங்கிலத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 218 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 729 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். மாவட்டம் முழுவதும் 91 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. வினாத்தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தனிஅறையில் வைக்கப்பட்டு இருந்தன.
தேர்வு மையத்தின் ஒவ்வொரு அறையிலும் மாணவ-மாணவிகளின் பதிவெண்கள் மேஜையில் எழுதப்பட்டு தயார்படுத்தப்பட்டது. அதுபோல் தேர்வு மையத்தின் நுழைவுவாசலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு எந்தெந்த பதிவு எண் கொண்ட மாணவ-மாணவிகள் எந்த கட்டிடத்துக்கு செல்ல வேண்டும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
1,209 பேர் தேர்வு எழுத வரவில்லை
மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 91 தலைமை ஆசிரியர்களும், 91 துறை அலுவலர்களும், 1,608 அறை கண்காணிப்பாளராக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியாற்றினார்கள். மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நேற்று காலை ஆங்கிலத்தேர்வு நடைபெற்றது. 24 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களில் 1,209 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story