ஆன்லைன் வர்த்தகம் மூலம் 16 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்


ஆன்லைன் வர்த்தகம் மூலம் 16 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது   போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
x
தினத்தந்தி 9 May 2022 3:34 PM GMT (Updated: 2022-05-09T21:04:21+05:30)

ஆன்லைன் வர்த்தகம் மூலம் 16 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்

கோவை

ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.16 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது   போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

ஆன்லைன் வர்த்தகம்

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த விமல்குமார், யூடியூப் சேனல் மூலம் போரெக்ஸ் டிரேட் எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கினார்.

 அதற்காக கோவை காளப்பட்டியில் தலைமை அலுவலகம் அமைத்தார். 
அவர், தனது யூடியூப் சேனல் மூலம் முதலீடு செய்தால் முதலீட்டு தொகையுடன் மாதம் 8 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தார்.  

ரூ.16 லட்சம் மோசடி

அதை நம்பி ஏராளமானவர்கள் முதலீடு செய்து உள்ளனர். 

ஆனால் விமல்குமார் அவர்களுக்கு பணத்தை திரும்பி கொடுக்கா மல் மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூறி கடந்த பிப்ரவரி மாதம் முதலீட்டாளர்கள் கோவை கலெக்டரிடம் புகார் அளித்தனர். 


இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த முதலீட்டாளர் ஒருவர், ரூ.16 லட்சம் வரை இழந்து விட்டதாக கோவை பொருளாதர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கணவன்-மனைவி மீது வழக்கு

இதில் ஆன்லைன் நிறுவனம் நடத்தி மோசடி செய்தது கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த விமல்குமார் (வயது 37) என்பதும், 

அவருக்கு உடந்தையாக மனைவி ராஜேஸ்வரி (35) இருந்ததும் தெரியவந்தது.

 இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் சட்டப்பிரிவு 420 (மோசடி), 406 (நம்பிக் கை மோசடி), 120 (கூட்டு சதி), பொருளாதார முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டம் (டான்பிட்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story