மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 9 May 2022 9:14 PM IST (Updated: 9 May 2022 9:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு மனு கொடுப்பதற்காக வந்த மாற்றுத்திறனாளிகள் கீழ் தளத்தில் அமர்ந்து இருந்தனர். 
அவர்களிடம் நேரடியாக கலெக்டர் செந்தில்ராஜ் மனுக்களை வாங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர ஸ்கூட்டர்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சரவணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story