ரூ.4 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்


ரூ.4 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
x
தினத்தந்தி 9 May 2022 9:20 PM IST (Updated: 9 May 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

ரூ4 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம், 
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 7 விவசாயிகள் 107 மூட்டைகள் (4627 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.3.94 லட்சத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.90-க்கும், குறைந்த பட்சமாக ரூ.72-க்கும், சராசரியாக ரூ.86 - க்கும் ஏலம் போனது.  ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆர்.மாரியப்பன் செய்திருந்தார்.

Next Story