கள்ளக்காதலு இடையூறாக இருந்ததால் காய்கறி வியாபாரி கொலை; மனைவி கைது
காய்கறி வியாபாரி இறந்த வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்து கட்டியது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக அவரது மனைவியை கைது செய்து கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு:
காய்கறி வியாபாரி
சித்ரதுர்கா மாவட்டம் ெசல்லக்கெரே தாலுகா வீரதிம்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோபாலய்யா(வயது 45). காய்கறி வியாபாரி. இவரது மனைவி சந்திரகலா(32). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம்(ஏப்ரல்) 20-ந்தேதி தம்பதியினர் கோபாலனஹள்ளி கிராமம் அருகே உள்ள காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று விட்டு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது செல்லும் வழியில் ஆட்டோ பழுதாகியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் கோபாலய்யாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், தகுந்த சிகிச்சை கிடைக்காமல் கோபாலய்யா இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதையறிந்த கோபாலய்யாவின் சகோதரர் ராமப்பா அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி செல்லக்கெரே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். மேலும் கோபாலய்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கொலை
இந்த நிலையில் கோபாலய்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் கோபாலய்யா பயங்கர ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் கோபாலய்யாவின் மனைவி சந்திரகலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், போலீசாரிடம் முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் சந்திரகலாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கள்ளக்காதலுக்கு
இடையூறாக இருந்ததால்...
அதாவது கோபாலய்யாவின் மனைவி சந்திரகலாவுக்கு, அதேகிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் 2 பேரும் தனியாக சந்தித்து பேசி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கோபாலய்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர், மனைவி சந்திரகலாவை கண்டித்து கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் சந்திரகலா கள்ளக்காதலை கைவிட மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதைதொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கணவர் என்றும் பாராமல் கோபாலய்யாவை சந்திரகலா, தனது கள்ளக்காதலன் ராஜசேகருடன் சேர்ந்து தீர்த்து கட்ட திட்டமிட்டார்.
அதன்படி சம்பவத்தன்று ஆட்டோ பழுதாகி நின்றபோது சந்திரகலா, ராஜசேகருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து கோபாலய்யாவை உருட்டு கட்டையால் அடித்து கொன்றது தெரியவந்தது.
கைது
இதையடுத்து சந்திரகலாவை போலீசார் கைது செய்தனர். கைதான அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் ராஜசேகரை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story