வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 9 May 2022 9:40 PM IST (Updated: 9 May 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

திருப்பூர், 
காங்கயம் அருகே மனைவியை கொலை செய்த வடமாநில தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
மனைவி கொலை
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் குமார் மண்டல் (வயது 30). இவருடைய மனைவி ரூனாதேவி (22). இவர்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே காடையூர் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தநிலையில் கடந்த 9-12-2017 அன்று கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சிக்கந்தர் குமார் மண்டல் தாக்கியதில் ரூனாதேவி இறந்தார். இதுகுறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சிக்கந்தர்குமார் மண்டலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மனைவியை கொலை செய்த சிக்கந்தர் குமார் மண்டலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார். 
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

Next Story