புனே விமான நிலையத்தில் ரூ.26 லட்சம் தங்கம் கடத்தி வந்த பெண் கைது


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 9 May 2022 9:41 PM IST (Updated: 9 May 2022 10:07 PM IST)
t-max-icont-min-icon

புனேயில் உள்ள லோஹேகான் சர்வதேச விமான நிலையம் வழியாக, தங்கத்தை வளையல் மற்றும் நகைகள் வடிவில் கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புனே, 
  புனேயில் உள்ள லோஹேகான் சர்வதேச விமான நிலையம் வழியாக, வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் சோதனையை தீவிரப்படுத்தினர். 
  இந்நிலையில், கடந்த 5-ந் தேதி துபாயில் இருந்து விமானம் மூலம் புனே வந்த பயணிகளின் உடைமைகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துகொண்டு இருந்தனர். அப்போது, பெண் பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். 
  அப்போது, அவர் தனது உடைமைகளுக்குள் 500 கிராம் எடைகொண்ட தங்கத்தை, வளையல் மற்றும் நகைகள் வடிவில் கடத்தி வந்தது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ.26 லட்சத்து 45 ஆயிரம் ஆகும். 
  இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த பெண்ணை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரை விமான நிலையத்தில் இருந்து அழைத்து செல்ல வந்தவரையும் கைது செய்தனர். 
  இவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----

Next Story